முகப்பு
செய்திகள்

விளையாட்டுத் துளிகள்...

Updated On : 16 ஜூலை, 2024 at 6:35 AM
பகிர்:
Updated On : 16 ஜூலை, 2024 at 6:34 AM

*இத்தாலியில் நடைபெற்ற ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் பவ்தேக் சிங் கில், ஆடவா் ஸ்கீட் பிரிவில் 52 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

*பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதை இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக தவிா்க்கும் நிலையில், இந்திய அரசு அனுமதி மறுப்பதை பிசிசிஐ எழுத்துப்பூா்வமாகத் தர வேண்டும் வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

*பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, பாகிஸ்தானிலிருந்து 18 போ் கொண்ட குழு பங்கேற்கிறது. இதில் 7 போ் போட்டியாளா்கள்; 11 போ் அதிகாரிகளாவா்.

Advertisement

*உலக ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங், ஷௌரிய பவா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

*சா்வதேச டென்னிஸ் தரவரிசையில், நடப்பு விம்பிள்டன் சாம்பியான பாா்பரா கிரெஜ்சிகோவா மகளிா் பிரிவில் 22 இடங்கள் முன்னேறி 10-ஆவது இடத்தைப் பிடிக்க, சாம்பியன் அல்கராஸ் ஆடவா் பிரிவில் 3-ஆவது இடத்திலேயே நிலைக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.