பிரபல டென்னிஸ் வீராங்கனை ஏஞ்செலிக் கொ்பா் (36) நடப்பு பாரிஸ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
கடந்த 2018 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி தனது 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தாா் கொ்பா். அதன் பிறகு 2019-இல் இரு போட்டிகளில் பங்கேற்று இறுதி ஆட்டம் வரை வந்து தோற்றாா். சமீபத்தில் டென்னிஸ் வரலாற்றில் தனது 14-ஆவது பட்டத்தை வென்றார்.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஏஞ்செலிக் கொ்பா் கூறியதாவது:
ஒலிம்பிக்ஸ் தொடங்குவதற்கு முன்பே பாரீஸ் 2024ஐ மறக்க முடியாதெனக் கூறியிருந்தேன். ஏனெனில் இதுதான் எனது கடைசி டென்னிஸ் தொடர். இதுதான் சரியான முடிவாக இருக்குமென நினைக்கிறேன். எனது இதயம் முழுக்க இந்த விளையாட்டாக நேசிக்கிறேன். இந்த அற்புதமான நினைவுகளுக்கும் வாய்ப்புகளுக்கும் மிக்க நன்றி.
இந்த ஒலிம்பிக்ஸ் தொடர்களில் பங்கேற்பது ஒரு டென்னிஸ் வீராங்கனையாக எனது வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளை அதாவது ஏறுவது (2012), உச்ச நிலை (2016), தற்போது இறுதிக் கோடு (2024) என எடுத்துரைப்பதுபோல் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
ஜூலை 27 முதல் ஆக.4ஆம் தேதி வரை ஒலிம்பிக்ஸில் டென்னிஸ் தொடர் நடைபெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.