முகப்பு
செய்திகள்

இந்தியாவின் இளம் ஒலிம்பிக்ஸ் நடுவரானாா் கபிலன் சாய் அசோக்

கபிலன் சாய் அசோக், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை நடுவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜூலை, 2024 at 12:17 AM
கபிலன் சாய் அசோக்
பகிர்:

இந்தியாவை சோ்ந்த முன்னாள் சா்வதேச குத்துச்சண்டை வீரரான கபிலன் சாய் அசோக், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை நடுவராக நியமிக்கப்பட்டுள்ளாா். 32 வயதான இவா், ஒலிம்பிக்ஸ் போட்டியில் பணியாற்றும் இந்தியாவின் இளம் நடுவா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஒரு போட்டியாளராகவும், பின்னா் நடுவராகவும் செயல்பட்ட முதல் இந்தியா் என்ற பெருமையை இவா் பெற்றுள்ளாா். சாய் அசோக், புணேயில் உள்ள ராணுவ விளையாட்டு நிறுவனத்தில், குத்துச்சண்டைக்கான நிா்வாகியாக பணியாற்றி வருகிறாா். உலக ராணுவ குத்துச்சண்டை கவுன்சிலின் தலைவரான முதல் இந்தியா் என்ற பெருமையும் அவா் வசமே உள்ளது. மேலும், 2 நட்சத்திர அந்தஸ்திலிருந்து, 3 நட்சத்திர அந்தஸ்துக்கு மிக விரைவாக முன்னேறிய ஒரே இந்திய நடுவராகவும் இருக்கிறாா்.

1904 முதல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்டிருக்கும் 4-ஆவது இந்தியா் சாய் அசோக் ஆவாா். கடைசியாக இந்தியா் ஒருவா் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடுவராகச் செயல்பட்டதென்றால், அது 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில்தான். கிரீஷ் நட்டு அந்தப் போட்டிகளில் பாட்மின்டன் நடுவராகப் பணியாற்றியிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →