படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
செய்திகள்

கடைசி டெஸ்ட்டிலும் வெற்றி; தொடரை முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்து அபாரம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜூலை 26) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 376 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம், இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் 94 ரன்கள் முன்னிலை பெற்றது. போட்டியின் இரண்டாம் நாளான நேற்று (ஜூலை 27) ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் எடுத்திருந்தது.

இங்கிலாந்தைக் காட்டிலும் 61 ரன்கள் பின் தங்கிய நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது மேற்கிந்தியத் தீவுகள். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 175 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக மிக்கில் லூயிஸ் 57 ரன்களும், காவெம் ஹாட்ஜ் 55 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், சோயப் பஷீர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 81 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.

82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 7.2 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 28 பந்துகளில் 57 ரன்கள் (9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்தும், பென் டக்கெட் 16 பந்துகளில் 25 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்தும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. மார்க் வுட் ஆட்ட நாயகனாகவும், கஸ் அட்கின்சன் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

SCROLL FOR NEXT