கடைசி டி20: இந்தியா பேட்டிங்; முக்கிய வீரர்களுக்கு ஓய்வு!
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 30) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ரிஷப் பந்த், மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற முக்கிய வீரர்களுக்கு இன்றையப் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.