அஸ்வின் அதிரடியால் எலிமினேட்டரில் வென்றது திண்டுக்கல் அணி படங்கள்: இன்ஸ்டா/ திண்டுக்கல் டிராகன்ஸ்
செய்திகள்

டிஎன்பிஎல்: அஸ்வின் அதிரடியால் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் த்ரில் வெற்றி!

டிஎன்பிஎல் டி20 தொடரில் எலிமினேட்டர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.

DIN

டிஎன்பிஎல் டி20 தொடரில் எலிமினேட்டர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

இதன் மூலம் அந்த அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது. தோல்வி கண்ட திருப்பூா், குவாலிஃபயா் 2 ஆட்டத்துக்கு வந்துள்ளது.

எலிமினேட்டா் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதின.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் 158/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபா அபரஜித் 72, ஜெகதீஷன் 25, அபிஷேக் தன்வர் 22 ரன்களும் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் அரைசதமடித்தார். தொடக்க வீரர் ஷிவம் சிங்கும் அரைசதமடித்தார். ஷிவம் சிங் 64 ரன்களுக்கும், 57 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ஆக.2ஆம் தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

SCROLL FOR NEXT