டிங் லிரென், பிரக்ஞானந்தா. படங்கள்: நார்வே செஸ் / எக்ஸ்
செய்திகள்

உலக சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

நாா்வேயில் நடைபெறும் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான டிங் லிரெனை வீழ்த்தியுள்ளார்.

DIN

நாா்வேயில் நடைபெறும் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான டிங் லிரெனை வீழ்த்தியுள்ளார்.

நாா்வேயில் நடைபெறும் செஸ் போட்டியில் 7ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென் உடன் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா மோதினார். கிளாசிக்கல் கேமில் டிரா ஆனது. பின்னர், ஆர்மகெடான் கட்டத்துக்கு சென்றது. பின்னர் இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்றார். இதன்மூலம் பிரக்ஞானந்தா புள்ளிப் பட்டியலில் தன் நிலையை தக்க வைத்துள்ளார்.

ஏற்கனவே நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் டிங் லிரெனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சென் ஹிகரு நகமுராவிடம் ஆர்மகெடானில் தோல்வியுற்றார். இதன்மூலம் கர்ல்சென் 13 புள்ளிகளுடன் முதலிடத்தினை தக்க வைத்துள்ளார். ஹிகரு நகமுரா 12.5 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் பிரக்ஞானந்தா 11 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

10 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் இன்னும் 2 சுற்றுகள் மட்டுமே மீதமிருக்கின்றன. நம்பர் 1, நம்பர் 2, நடப்பு உலக சாம்பியன் என ஜாம்பவான்களை பிரக்ஞானந்தா வீழ்த்தி உலக செஸ் தரவரிசையில் டாப் 10இல் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

8ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா மீண்டும் கார்ல்சென் உடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்றைய மின்தடை

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

SCROLL FOR NEXT