பிரக்ஞானந்தா படம்: எக்ஸ்/ நார்வே செஸ்
செய்திகள்

நார்வே செஸ்: முதலிடம் பிடிப்பாரா பிரக்ஞானந்தா?

நார்வே செஸ் போட்டியின் 9ஆவது சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சென் தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

DIN

நார்வே செஸ் போட்டியின் 9ஆவது சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சென் தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

நார்வே செஸ் போட்டியின் 9-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, கோனெரு ஹம்பி, வைஷாலி ஆகியோர் தோல்வியடைந்தனர்.

கிளாசிக்கல் கேமில் டிரா ஆகி ஆர்கமெடானில் கார்ல்சென் ஃபிரௌஸ்ஜாவுடனும் டிங் லிரென் ஹிகரு நகமுராவுடனும் பேபியானோ கரோனா பிரக்ஞானந்தாவுடனும் வென்றார்கள்.

9ஆவது சுற்று முடிவில் கார்ல்சென் 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஹிகரு நகமுரா 14.5 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் பிரக்ஞானந்தா 13 புள்ளிகளுடனும் 3ஆவது இடத்திலும் இருக்கிறார்கள்.

ஹிகரு நகமுரா தொல்வியுற்றதால் கார்ல்சென் தனது முதல் இடத்தினை தக்கவைத்துள்ளார். கடைசி சுற்றில் கார்ல்சென் தோல்வியுற்று, கிளாசிக்கல் கேமில் ஹிகரு நகமுரா வென்றால் முதலிடம் வர வாய்ப்பிருக்கிறது.

பிரக்ஞானந்தா முதலிடம் பிடிக்க கார்ல்சென், ஹிகரு நகமுரா இருவரும் தோற்க இவர் கிளாசிக்கல் கேமில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரிவில் கோனெரு ஹம்பி, வைஷாலி ஆகியோரும் தோல்வியடைந்தனர்.

மகளிர் பிரிவில் வைஷாலி, கொனேரு ஹம்பி முதலிடம் பிடிக்க வாய்ப்பே இல்லை. வென்ஜுன், டிங்ஜி, முஸிஷுக் முதலிடத்துக்கான போட்டியில் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பரமக்குடி புத்தக திருவிழாவில் மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டி

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

மது போதையில் தூங்கியவா் கழுத்தறுத்துக் கொலை

427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல்

கருங்குளம் சக்திமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT