மேக்னஸ் கார்ல்சென் படம்: எக்ஸ் / நார்வே செஸ்
செய்திகள்

6-ஆவது முறையாக நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சென்!

நார்வே செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் கார்ல்சென் வென்று பட்டத்தை 6ஆவது முறையாக கைப்பற்றியுள்ளார்.

DIN

நார்வே செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் கார்ல்சென் வென்று பட்டத்தை 6ஆவது முறையாக கைப்பற்றியுள்ளார்.

10 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், ஆடவா் பிரிவில் மேக்னஸ் கார்ல்சென் 17.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

கடைசி சுற்றில் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவிடம் மோதிய கார்ல்சென் கிளாசிக்கல் கேமில் டிரா ஆகி ஆர்கமெடானுக்கு சென்றது. அதில் வென்ற கார்ல்சென் நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை 6ஆவது முறையாகக் கைப்பற்றினார்.

கார்ல்சென் 17.5 புள்ளிகளுடன் முதலிடம் நகமுரா 15.5 புள்ளிகளுடன் 2ஆவது இடமும் இந்தியாவின் பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் 3ஆவது இடமும் பிடித்தார்கள். நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் 6ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

2016இல் முதன்முறையாக நார்வே செஸ் கிளாசிக்கல் கேமில் பட்டம் வென்ற கார்ல்சென் தொடர்ந்து 2019, 2020, 2021, 2022, 2024இல் பட்டம் வென்றுள்ளார். இடையே 2023இல் மட்டும் ஹிகரு நகமுரா வென்றது குறிப்பிடத்தக்கது.

ஹிகரு நகமுராவை ஆர்கமெடானில் பிரக்ஞானந்தா வென்றதால் நகமுராவுக்கு முதல் வாய்ப்பு பறிபோனது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 19 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார்.

மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி 12.5 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் கொனேரு ஹம்பி 10 புள்ளிகளுடன் 5ஆவது இடமும் பிடித்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவி தோ்வு

SCROLL FOR NEXT