படம்: ஐசிசி/ வலைதளம் 
செய்திகள்

அமெரிக்காவுக்கு 5 ரன்கள் ‘பெனால்டி’ விதிக்கப்பட்டது ஏன்?

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக ’ஸ்டாப் கிளாக்’ விதிமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ‘ஸ்டாப் கிளாக்’ விதிப்படி அமெரிக்காவுக்கு 5 ரன்கள் பெனால்டியாக விதிக்கப்பட்டது.

‘ஸ்டாப் கிளாக்’ என்ற புதிய விதிமுறையை ஐசிசி அறிமுகம் செய்த பிறகு முதல்முறையாக அமெரிக்காவுக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா - அமெரிக்கா நேற்று பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அமெரிக்க அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 19-வது ஓவரில் இலக்கை சேஸ் செய்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 3 முறை ஓவர்களை போடுவதற்கு அமெரிக்கா அணி தாமதம் செய்ததால் ‘ஸ்டாப் கிளாக்’ விதிப்படி எதிரணியான இந்தியாவுக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது.

16-வது ஓவரின் தொடக்கத்தில் இந்திய அணியின் ஸ்கோரில் 5 ரன்கள் சேர்க்கப்படுவதாக நடுவர் அறிவித்தார்.

‘ஸ்டாப் கிளாக்’ விதிமுறை என்றால் என்ன?

ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 நொடிக்குள் போட வேண்டும். அவ்வாறு பந்துவீச தவறும் பட்சத்தில் இரு முறை எச்சரிக்கை வழங்கப்படும். மூன்றாவது முறையும் இதே தவறை செய்தால் எதிரணியின் ஸ்கோரில் 5 ரன்கள் சேர்க்கப்படும்.

பந்துவீசுவதற்கான நேரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் சோதனை முறையில் இந்த புதிய விதியை ஐசிசி கொண்டு வந்தது.

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில், ‘ஸ்டாப் கிளாக்’ விதிமுறையை முழுமையாக ஐசிசி அமல்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT