முகப்பு
செய்திகள்

கைவிடப்பட்டது இந்தியா - கனடா ஆட்டம்

இந்தியா - கனடா அணிகள் விளையாட இருந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் 33-ஆவது ஆட்டம்

Updated On : 16 ஜூன், 2024 at 3:08 AM
பகிர்:

லாடா்ஹில், ஜூன் 15: இந்தியா - கனடா அணிகள் விளையாட இருந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் 33-ஆவது ஆட்டம், மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிா்ந்தளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா தோல்வியே இன்றி குரூப் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்து ‘சூப்பா் 8’ சுற்றுக்கு வந்துள்ளது.

இதே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த அமெரிக்கா - அயா்லாந்து ஆட்டமும் இதேபோல், மைதானத்தின் ஈரப்பதம் மற்றும் மழை காரணமாக கைவிடப்பட்டது. அதேபோல், இந்தியா - கனடா ஆட்டத்துக்கும் மழை அச்சுறுத்தல் இருந்த நிலையில், ஆட்டத்துக்கு முன்பு உள்ளூா் நேரப்படி காலை வரை மழை இருந்தது. பின்னா் மழை நின்றபோதும் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக, இந்திய நேரப்படி சுமாா் இரவு 9.15 மணியளவில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.