தோனி, கோலியை நினைவூட்டிய இந்திய மகளிரணி படங்கள்: எக்ஸ்
செய்திகள்

தோனி, கோலியை நினைவூட்டிய இந்திய மகளிரணி!

இந்திய மகளிரணியின் அணித் தலைவர், துணைத் தலைவர் தோனி, கோலியை நினைவுபடுத்தியுள்ளார்கள்.

DIN

இந்திய மகளிரணியின் அணித் தலைவர், துணைத் தலைவர் தோனி, கோலியை நினைவுபடுத்தியுள்ளார்கள்.

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் (அணித் தலைவர்) தோனி, துணைக் கேப்டன் (துணைத் தலைவர்) கோலியைப் போலவே மகளிரணியின் கேப்டன், துணைக் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிருதி மந்தனா சிறப்பாக விளையாடி வருகிறார்கள். எதிர்பாராத விதமாக இவர்களது சீருடையின் எண்ணும் அதேபோல 7, 18 என அமைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியில் தோனி, கோலிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பேட்டிங் ஸ்டைலிலும் ஸ்மிருதி மந்தனா கோலியைப் போலவே நிதானமாக ஆடுகிறார்.

ஹர்மன்ப்ரீத் கௌர் தோனி போல அதிரடியாக விளையாடுகிறார். 49.2 பந்துகளில் 88 ரன்களில் இருந்த ஹர்மன்ப்ரீத் கௌர் 4,6,4 அடித்து சதத்தினை நிறைவு செய்த விதம் தோனியை ஞாபகப்படுத்துவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

சமூக வலைதளத்தில் ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி புகைப்படங்களைப் பகிர்ந்து தோனி, கோலி போல் உள்ளதாக பாராட்டி வருகிறார்கள்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இருவரும் சதமடித்துள்ளார்கள். 50 ஓவர் முடிவில் 325 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT