கோப்புப் படம்
செய்திகள்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் யார்?

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்காக இந்திய அணியுடன் யார் செல்லவிருப்பது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்காக இந்திய அணியுடன் விவிஎஸ் லக்‌ஷ்மண் ஜிம்பாப்வே செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற ஜூலை 6 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்காக இந்திய அணியுடன் விவிஎஸ் லக்‌ஷ்மண் ஜிம்பாப்வே செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவிஎஸ் லக்‌ஷ்மண்

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெறுகிறார். இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கான செயல்பாடுகளை பிசிசிஐ முடுக்கிவிட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும், அவரது பெயரை அதிகாரபூர்வமாக அறிவிப்பது மட்டுமே மீதமுள்ளது எனவும் கூறப்படுகிறது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர் முடிவடைந்தவுடன் இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெகதீசன் அபார சதம்! டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

இனி 1.13 மணி நேரத்தில் சென்னை - பெங்களூரு பயணம்: அஷ்வினி வைஷ்ணவ்

எம்.எம். நரவனே புத்தகத்தில் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சும் ஒரு வரி : பிரியங்கா காந்தி பேச்சு

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

SCROLL FOR NEXT