இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருடன், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. படம் | Women’s CricZone எக்ஸ் தளப் பதிவு
செய்திகள்

சென்னை: இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் டெஸ்ட் போட்டி அனுமதி இலவசம்!

சேப்பாக்கத்தில் நடைபெறும் மகளிர் டெஸ்ட் போட்டிக்கு அனுமதி இலவசம்.

DIN

தென்னாப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 , ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஓடிஐ தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் அபாரமாக ஆடிய இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரை முழுமையாக வென்று சாதனை படைத்தது.

அதன் தொடர்ச்சியாக இரண்டு அணிகளும் மோதும் ஒரேயொரு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வருகிற ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 1 தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிக்கு வரும் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா ஹாஸ்டல் சாலை வழியாக வரும் சி, டி மற்றும் இ கீழ் தளத்திலும், வாலாஜா சாலை வழியாக வரும் ஐ, ஜெ, கே கீழ் தளத்திலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT