நேற்று (ஜூன் 29) நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் பரபரப்பான கடைசி த்ரில் ஓவரில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா. இதன் மூலம் 13 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேறியது.
இந்திய கிரிக்கெட் அணியின் இந்த அபார வெற்றியைக் கொண்டாடும் விதமாக பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விடியோவில் பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது, ``இந்திய கிரிக்கெட் அணியால் பெருமிதம் கொள்கிறோம். இந்தப் போட்டி வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
ராகுல் தெரிவித்திருப்பதாவது, ``உலகக் கோப்பை போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்” என்பது மட்டுமின்றி, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ட்ராவிட்டையும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, ``இந்திய அணியின் இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி, சாதனையுடன் முடிந்தது” என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.