செய்திகள்

பந்துவீச்சில் அசத்திய ஆவேஷ் கான்; 170 ரன்களுக்கு ஆட்டமிழந்த விதர்பா!

ரஞ்சிக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் விதர்பா முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

ரஞ்சிக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் விதர்பா முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரஞ்சிக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (மார்ச் 2) தொடங்கின. முதல் அரையிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகளும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளும் விளையாடி வருகின்றன.

மத்திய பிரதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கரூண் நாயர் அரைசதம் எடுத்தார். அவர் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக அதர்வா டைடு 39 ரன்கள் எடுத்தார். மத்திய பிரதேசம் சார்பில் ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேசம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்துள்ளது. ஹிமான்ஷு மந்த்ரி 26 ரன்களுடனும், ஹர்ஷ் கௌலி 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மத்திய பிரதேசம் விதர்பாவைக் காட்டிலும் 123 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT