செய்திகள்

இவர் ஓய்வு பெறும்போது கேப்டன் பதவியை விட்டுவிடுவேன்: பாட் கம்மின்ஸ்

DIN

கேப்டன் பதவியிலிருந்து விலகுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேதன் லயனின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்தப் போட்டியில் நேதன் லயன் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இந்த நிலையில், நேதன் லயன் வருகிற 2027 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேதன் லயன் மிகச் சிறந்த வீரர். அவர் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடையாக இருப்பது அவரது உடல்நலம். அவர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் ஆண்டுக்கு 10 டெஸ்ட் போட்டிகளில் அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் கண்டிப்பாக இடம்பெறுவார். அவர் வருகிற 2027 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். அவர் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும்போது நான் எனது கேப்டன் பதவியிலிருந்து விலகி விடுவேன் என அவரிடம் நான் ஏற்கனவே கூறியுள்ளேன். ஏனென்றால், அது எனது வாழ்க்கையை மேலும் எளிதாக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT