கோப்புப்படம் 
செய்திகள்

சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாகும் பாட் கம்மின்ஸ்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பாட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்துவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே தொடங்கி விட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஐபிஎல் மினி ஏலம் துபையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அண்மையில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பாட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்துவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சன் ரைசர்ஸ் அணியை தென்னாப்பிரிக்க வீரர் அய்டன் மார்கரம் வழிநடத்தி வந்த நிலையில் தற்போது பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்

போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT