நீல் வாக்னர் 
செய்திகள்

ஓய்வை அறிவிக்க வற்புறுத்தப்பட்ட நீல் வாக்னர்: முன்னாள் நியூசிலாந்து வீரர்

ஓய்வு முடிவை அறிவிக்க நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் நீல் வாக்னர் வற்புறுத்தப்பட்டதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் பேச்சு.

DIN

ஓய்வு முடிவை அறிவிக்க நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் நீல் வாக்னர் வற்புறுத்தப்பட்டதாக அந்த அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் நீல் வாக்னர் அவரது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இந்த நிலையில், ஓய்வு முடிவை அறிவிக்க நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் நீல் வாக்னர் வற்புறுத்தப்பட்டதாக ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ராஸ் டெய்லர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தற்போது அனைத்து நிகழ்வுகளுக்குமான அர்த்தம் சற்று புரிகிறது. நீல் வாக்னர் ஓய்வு விஷயத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நீல் வாக்னரின் ஓய்வு வற்புறுத்தலால் எடுக்கப்பட்ட முடிவு என நினைக்கிறேன். நீல் வாக்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதை கவனித்துப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அவர் கூறியிருப்பார். அதனால் அணியில் விளையாடுவதற்கு அவர் தயாராகவே இருந்துள்ளார் என்றார்.

நியூசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நீல் வாக்னர் 260 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT