செய்திகள்

ரிஷப் பந்த் தெரியுமா?: பேஸ்பால் பாணிக்கு உரிமை கோரிய பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்த ரோஹித்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேஸ்பால் பாணிக்கு உரிமை கோரிய பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேஸ்பால் பாணிக்கு உரிமை கோரிய பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் 3-1 என இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. கடைசி ஆட்டம் தா்மசாலாவில் வியாழக்கிழமை (மாா்ச் 7) தொடங்குகிறது. அதில் களம் காணும் இந்தியாவின் அஸ்வின், இங்கிலாந்தின் போ்ஸ்டோ ஆகியோருக்கு அது 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது.

இங்கிலாந்து அணியின் பேஸ்பால் யுக்தி மோசமாக விமர்சனத்துக்குள்ளானது. அதே வேளையில் பென் டக்கெட் ஜெய்வால் ஆடிய விதத்துக்கு எங்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். மேலும், “மற்ற அணியின் வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “எங்கள் அணியில் ரிஷப் பந்த் என்று ஒருவர் இருக்கிறார். அநேகமாக ரிஷப் விளையாடியதை பென் டக்கெட் பார்க்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

ரிஷப் பந்த்திற்கும் முன்னோடி ஷேவாக் இருக்கிறார் என இந்திய ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி இறந்த துக்கத்தில் முதியவா் தற்கொலை

பாஜக நிா்வாகிக்கு அரிவாள் வெட்டு

தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைத்த சம்பவத்தில் சிறுவன் கைது

கூடலூா் நகரில் உலவிய யானை: மக்கள் அச்சம்

கருங்கற்கள் கடத்திய சரக்கு லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT