ரோஹித் சர்மா 
செய்திகள்

ரோஹித் சர்மாவை நோக்கி ஈர்க்கப்படும் வீரர்கள்: ராகுல் டிராவிட் புகழாரம்!

ரோஹித் சர்மா மிகச் சிறந்த கேப்டன் என ராகுல் டிராவிட் புகழாரம்.

DIN

ரோஹித் சர்மா மிகச் சிறந்த கேப்டன் எனவும், வீரர்கள் அவரை நோக்கி ஈர்க்கப்படுவதாகவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றிய பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ராகுல் டிராவிட் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: சிறப்பான இந்திய அணியுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களிடமிருந்து நான் எப்போதும் கற்றுக் கொண்டிருக்கிறேன். கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து செயல்படுவது சிறப்பாக உள்ளது. அவர் மிகச் சிறந்த வீரர் என நினைக்கிறேன். அவரை நோக்கி வீரர்கள் ஈர்க்கப்படுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. மருத்துவ அவசர காரணங்களுக்காக தொடரின் நடுவில் வீட்டிற்கு சென்ற அஸ்வின், மீண்டும் அணியுடன் இணைந்தது இந்தத் தொடரின் சிறப்பான தருணம் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT