செய்திகள்

105 ரன்களுக்கு ஆட்டமிழந்த விதர்பா; ஆதிக்கம் செலுத்தும் மும்பை!

ரஞ்சி இதிறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விதர்பா 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

ரஞ்சி இதிறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விதர்பா 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (மார்ச் 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சைத் தேர்வு செய்ய மும்பை முதலில் பேட் செய்தது.

மும்பை அணி 64.3 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்குர் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக பிரித்வி ஷா 46 ரன்களும், பூபென் லால்வானி 37 ரன்களும் எடுத்தனர். விதர்பா தரப்பில் ஹர்ஷ் துபே மற்றும் யஷ் தாக்குர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஆதித்யா தாக்கரே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய விதர்பா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது. அதர்வா டைடு 21 ரன்களுடனும், ஆதித்யா தாக்கரே 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மும்பையைக் காட்டிலும் விதர்பா 193 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விதர்பா 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக யஸ் ரத்தோட் 27 ரன்களும், அதர்வா டைடு 23 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் தவால் குல்கர்னி, ஷாம்ஸ் முலானி மற்றும் தனுஷ் கோட்டியான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷர்துல் தாக்குர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இதன்மூலம் மும்பை அணி 100 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றது.

மும்பை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அப்கிரேடட் வெர்ஷன்... சைத்ரா அச்சார்!

பூக்கி பட பூஜை விழா - புகைப்படங்கள்

குஸ்திக்கு ரெடி... ஐஸ்வர்யா லட்சுமி!

'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

முதல் ஒருநாள்: இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

SCROLL FOR NEXT