கோப்புப் படம் (தோனி, முகமது கைஃப்)  
செய்திகள்

சிஎஸ்கே அணியில் யார் சேர்ந்தாலும் சிறப்பாக விளையாடுகிறார்கள்: முன்னாள் இந்திய வீரர் புகழாரம்!

முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை புகழ்ந்துப் பேசியுள்ளார்.

DIN

முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் 5 முறை கோப்பியை வென்று அசத்தியுள்ளது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி.

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளி வரும் மார்ச் மாதம் 22ஆம் நாள் சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் சென்னையில் மோதுகின்றன.

முகமது கைஃப் கூறியதாவது: சிஎஸ்கே அணியில் யார் இணைந்தாலும் அவர்களது செயல்பாடு சிறப்பாக மாறுகிறது. ரஞ்சி இறுதிப் போட்டியில் ரஹானே, துஷார் தேஷ் பாண்டேவின் ஆட்டத்தினைப் பாருங்கள். இவர்கள் ஐபிஎல்-இல் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் சிஎஸ்கே அணியில் சென்றதும் அவர்களுக்கு தோனியிடம் இருந்து என்ன ஸ்பெஷலான கவனிப்பு கிடைக்கிறது எனத் தெரியவில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடத் துவங்குகிறார்கள்.

தோனியிடம் ஏதோ ஒரு சிறப்பான மருந்து இருக்கிறது. அது அவர்களை உடல் நலத்துடன் இருக்க வைக்கிறது. மேலும், அணிக்காக விளையாட வைக்கிறது.

தீபக் சஹார் காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இலங்கை அணியின் பதிரானா சரியாக விளையாடவில்லை. கான்வே காயம் காரணமாக விளையாடுவதில் சிக்கல். அணியில் முக்கியமான 3, 4 வீரர்கள் காயத்தில் இருப்பதால் தோனிக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இருப்பினும் இதையெல்லாம் எப்படி சமாளிப்பதென தோனிக்குத் தெரியும். அதைத்தான் அவர் ஒவ்வொரு வருடமும் செய்து வருகிறார் எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பௌா்ணமி கருட சேவை ரத்து

பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் பச்சோந்தி மீட்பு

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

முல்லை லட்சுமி நாராயணசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி: வியாபாரி மீது வழக்கு

SCROLL FOR NEXT