செய்திகள்

அமித்ஷாவைக் கிண்டலடித்தாரா அஸ்வின்?

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வருகிற மார்ச்.22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான, டிக்கெட்கள் விரைவில் விற்றுத்தீர்ந்ததால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

குறிப்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் எக்ஸ் தளத்தில், “ஐபிஎல் தொடரின் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுக்கானத் தேவை நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. எனது குழந்தைகள் ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சிகள் மற்றும் முதல் போட்டியை நேரில் காண விரும்புகின்றனர். தயவு செய்து உதவி செய்யுங்கள்” எனப் பதிவிட்டிருந்தார். இந்திய வீரருக்கு டிக்கெட் கிடைக்காதது குறித்து விமர்சனங்களும் கிண்டல்களும் எழுந்தன.

தொடர்ந்து, நடிகை ஜான்வி கபூரின் பெயர்கொண்ட போலி எக்ஸ் கணக்கிலிருந்து ஒருவர், “ சென்னை, பெங்களூரு போட்டியைக் காண பாக்ஸ் டிக்கெட் வழங்கியதற்கு நன்றி அஸ்வின் சார். தல (தோனி) மற்றும் கிங்கைக் ( விராட் கோலி) காண ஆவலுடன் இருக்கிறேன்” எனப் பதிவிட்டார். இதைப் பார்த்த அஸ்வின், “உங்களுக்காக என்னால் செய்ய முடிந்தது. சரி, அந்த டிக்கெட்களை எனக்குத் திருப்பி அனுப்ப முடியுமா?” எனப் பதிலளித்தார்.

உடனே, மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷாவின் பெயரில் துவங்கப்பட்ட போலி கணக்கிலிருந்து ஒருவர், “ நானும் வரிசையில் இருக்கிறேன் அண்ணா” எனப் பதிவிட்டார்.

அதனைக் கண்ட அஸ்வின், “சார். கேரளத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பேரணிக்கு நீங்கள் செல்லவில்லையா? நான் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.” எனக் கிண்டலடித்தார்.

அதற்கு அப்போலி கணக்கிலிருந்து, “இல்லை அண்ணா. மோடி பேரணியில் பரபரப்பாக இருப்பதால் பிரதமர் அலுவலகத்தை நான்தான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எப்போதும் என்னைச் சந்திக்க வரலாம்” என பதில் வந்தது.

அஸ்வின், “ சரி சார். எங்கே, எப்போது என முடிவு செய்து என்னைத் தொடர்பு கொள்ளவும்” என பதிலளித்துள்ளார். நகைச்சுவைக்காக என்றாலும் அஸ்வின் பேசியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: சென்னையில் 99.30% தேர்ச்சி

ஸ்டார் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு!

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: சோனியா காந்தி

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 60 பேர்!

SCROLL FOR NEXT