செய்திகள்

2-வது டெஸ்ட்: 531 ரன்களுக்கு இலங்கை ஆட்டமிழப்பு!

DIN

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (மார்ச் 30) சட்டோகிராமில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து இலங்கை அணி வலுவான நிலையில் இருந்தது. அந்த அணியில் நிஷான் மதுஷ்கா (57 ரன்கள்), திமுத் கருணாரத்னே (86 ரன்கள்), குசால் மெண்டிஸ் (93 ரன்கள்), ஏஞ்சலோ மேத்யூஸ் (27 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

தினேஷ் சண்டிமால் 34 ரன்களுடனும், கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தினேஷ் சண்டிமால் 59 ரன்கள் எடுத்தும், கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 70 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கமிண்டு மெண்டிஸ் 167 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் இலங்கை அணி 531 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹாசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளையும், காலித் அகமது மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. ஜாகிர் ஹாசன் 28 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

வங்கதேச அணி இலங்கையைக் காட்டிலும் 476 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT