பாபர் அசாம்  
செய்திகள்

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்!

பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக வேகப் பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடி நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழுவின் ஒருமித்த கருத்துடன் பாபர் அசாமை பாகிஸ்தான் அணியின் (ஒருநாள் மற்றும் டி20) கேப்டனாக மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

SCROLL FOR NEXT