செய்திகள்

உன்னை கண்டடையாவிட்டால் நான் தொலைந்து போயிருப்பேன்: விராட் கோலி நெகிழ்ச்சி!

மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஜனவரி மாதம் லண்டன் சென்ற அவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக எக்ஸ் வலைத்தளப் பதிவின் மூலம் தெரிவித்தார்.

இந்த ஐபிஎல் தொடரில் 500 ரன்களுக்கு மேலாக ரன்களை குவித்துள்ளார்.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் அணியில் விராட் கோலி இடம் பிடித்துள்ளார். ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

இருவரும் 2017இல் திருமணம் செய்துகொண்டனர். விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினருக்கு வாமிகா என்ற 3 வயது பெண் குழந்தை இருக்கிறது. கடந்த பிப்ரவரியில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது மனைவி அனுஷ்கா சர்மா பிறந்தநாளில் தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “உன்னை கண்டடையாவிட்டால் நான் முழுமையாக தொலைந்து போயிருப்பேன். பிறந்தநாள் வாழ்த்துகள் எனது அன்பே. நமது உலகத்தின் வெளிச்சம் நீ. நாங்கள் உன்னை காதலிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜை

நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம்

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT