டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய சீருடைக்கான (ஜெர்சி) அறிமுக விடியோவை பிசிசிஐ இன்று (மே 13) வெளியிட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கான அணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டுவிட்டன. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை அண்மையில் பிசிசிஐ அறிவித்தது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய சீருடை இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடியோ வெளியிட்டு பிசிசிஐ தரப்பில் பதிவிட்டிருப்பதாவது: நமது இந்திய அணியை புதிய வண்ணங்களில் வரவேற்பதற்கான நேரமிது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய சீருடையை பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அதிகாரபூர்வ கிட் பார்ட்னர் அடிட்டாஸ் உடன் இணைந்து அறிமுகம் செய்கிறோம் எனப் பதிவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.