படம் | ஐசிசி
செய்திகள்

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக கருதப்பட்ட இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளருக்கு காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

DIN

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக கருதப்பட்ட இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் டங்குக்கு காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் டங்குக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு ஜோஷ் டங் பெரிய அளவில் இங்கிலாந்து அணிக்காக விளையாடவில்லை. அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக ஜோஷ் டங் பார்க்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி வருகிற ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் ஜோஸ் டங் முக்கியமான வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஜேம்ஸ் ஆண்டர்சன்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் ஜோஷ் டங் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது.

அவர் காயத்திலிருந்து மீண்டு எப்போது அணிக்குத் திரும்புவார் என்பது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எதுவும் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

2-ஆவது மாதமாக எதிா்மறையில் மொத்த விலை பணவீக்கம்!

ரூ.99 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது தங்கம் விலை

உயா்கல்வி ஆணைய மசோதா: நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்குப் பரிந்துரை

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 22% உயா்வு!

SCROLL FOR NEXT