DOTCOM
செய்திகள்

ஆர்சிபி கோப்பை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது: விஜய் மல்லையா

"கோலியை ஏலத்தில் எடுத்தபோதும் இதைவிட சிறந்த தேர்வு செய்திருக்க முடியாது என்று எண்ணினேன்."

DIN

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் இன்று இரவு நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பெங்களூரு எதிர்கொள்ளவுள்ள நிலையில், மல்லையா எக்ஸ் தளத்தில் பழைய நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது ஆர்சிபி அணியை மல்லையா வாங்கினார். இதனிடையே, கடந்த 2016-ஆம் ஆண்டு வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் நாட்டைவிட்டு மல்லையா தப்பிச் சென்ற பிறகு அணியின் உரிமையாளர் மாறினார்.

இந்த நிலையில், பெங்களூரு அணி குறித்து எக்ஸ் தளத்தில் மல்லையா பகிர்ந்திருப்பதாவது:

“நான் பெங்களூரு அணியின் உரிமத்தையும், விராட் கோலியை ஏலத்தில் எடுத்தபோதும் இதைவிட சிறந்த தேர்வுகளை செய்திருக்க முடியாது என்று எண்ணினேன்.

இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல பெங்களூரு அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக என் உள்ளுணர்வு கூறுகிறது. முன்னேறிச் செல்லுங்கள், வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT