செய்திகள்

2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம்!

2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த ஒலிம்பிக் சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

DIN

2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் வருகிற 2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்திடம் கடிதம் ஒன்றை சமர்பித்துள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் தகவல்படி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இந்தக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மகத்தான வாய்ப்பின் மூலம் இந்தியாவுக்கான பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், இளைஞர் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பலன்கள் ஏற்படும்.

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும் 2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து பேசியிருந்தார்.

இதையும் படிக்க..: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் விளையாடும் வாய்ப்பு யாருக்கு..? இந்தியா தகுதிபெறுமா..!

அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் சங்கத்தேர்தலுக்குப் பின்னர் போட்டியை நடத்தும் நாடுகள் குறித்து தெரிவிக்கப்படும். மேலும், இந்தத் தேர்தலை நடத்தும் நாடுகளுக்கானப் போட்டியில் சவூதி அரேபியா, கத்தார், துருக்கி ஆகிய நாடுகளும் உள்ளன.

இந்தியாவின் இந்தத் திட்டத்தை தற்போதைய ஒலிம்பிக் சங்கத் தலைவர் தாமஸ் பாஸ் ஆதரித்துள்ளார். கடைசியாக 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தியது.

2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் பட்சத்தில் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் நடைபெறவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க..:விராட் கோலி பிறந்தநாள்: மணற்சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்த ஒடிஸா கலைஞர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி நெருங்குவதால் ஜவுளிக் கடைகளில் குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

14 குழந்தைகள் இறப்பு: ம.பி.யில் மருத்துவா் கைது! இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு!

ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு குழாய் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

‘கோல்ட்ரிஃப்’ மருந்து உற்பத்தி நிறுவன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

நாகநாத சுவாமி கோயில் பாலாலயம்

SCROLL FOR NEXT