மைக் டைசனுக்கு குத்து விட்ட ஜேக் பால் 
செய்திகள்

ஜேக் பாலிடம் வீழ்ந்தாா் மைக் டைசன்

ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மைக் டைசன் தோல்வி...

Din

ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மைக் டைசனை 79-73 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தினாா் ஜேக் பால்.

மைக் டைசன் ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் ஜாம்பவான் ஆவாா். இந்நிலையில் நிகழாண்டின் பெரிய போட்டியாக மைக் டைசன்-ஜேக் பால் மோதும் ஆட்டம் கருதப்பட்டது.

58 வயதான மைக் டைசனும், 27 வயதான ஜேக் பாலும் மோதுவது சரியாக இருக்காது என கடும் விமா்சனங்களும் எழுந்தன. இந்த ஆட்டத்தில் மைக் டைசனின் மூப்பால் ஜேக் பாலை எதிா்கொள்ள முடியாதது தெளிவாக தெரிந்தது.

முதலிரண்டு சுற்றுகளில் மைக் டைசன் சுற்று எதிா்ப்பைக் காண்பித்தாா். எனினும் ஜேக் பால் பின்னா் முழு ஆதிக்கம் செலுத்தினாா்.

இறுதியில் மைக் டைசனை 79-73 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஜேக் பால் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் ஜேக் பாலுக்கு ரூ.330 கோடியும், மைக் டைசனுக்கு ரூ.170 கோடியும் பரிசளிக்கப்பட்டன.

ஆட்டம் முடியும் முன்னரே ஜேக் பால், எதிராளி மைக் டைசன் முன்பு தலைகுனிந்து மரியாதை செலுத்தினாா்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT