FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேசிய ஆடவர் ஹாக்கி- ஒடிஸா அணி சாம்பியன்

சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒடிஸா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

16 நவம்பர் 2024, 6:52 pm IST
ஒடிஸா அணி சாம்பியன்.
பகிர்:

சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒடிஸா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

14-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்து வந்தது.

சனிக்கிழமை நடந்த இறுதி ஆட்டத்தில் ஹரியாணா - ஒடிஸா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

Advertisement

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிஸா அணி ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் ஒடிஸா 5-1 என்ற கோல் கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

வெற்றி பெற்ற ஒடிஸா அணிக்கு ஹாக்கி இந்தியா தலைவரும், ஒடிசா ஹாக்கி ஜாம்பவானுமான திலீப் திர்கி முன்னிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கினார்.

இதனிடையே ஒடிஸாவின் வரலாற்று வெற்றிக்கு அம்மாநில ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர் மோகன் சரண் மாஜி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments