குரோசியா அணி Darko Bandic
செய்திகள்

காலிறுதிக்கு தகுதிபெற்ற குரோசியா..! ரொனால்டோ பங்கேற்காதது ஏன்?

நேஷ்னல் லீக் போட்டியில் போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியில் டிரா செய்த குரோசியா அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

DIN

நேஷ்னல் லீக் போட்டியில் போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியில் டிரா செய்த குரோசியா அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகளில் போர்ச்சுகல் - குரோசியா அணிகள் இன்று நள்ளிரவு மோதின.

இந்தப் போட்டியில் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது குரோசியா அணி.

போர்ச்சுகல் சார்பாக 33 ஆவது நிமிஷத்தில் பெலிக்ஸும் குரோசியா சார்பாக கவார்டியோல் 65ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.

இந்தப் போட்டியில் போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்கவில்லை. ஏற்கனேவ, போர்ச்சுகல் அணி காலிறுதிக்கு தகுதிபெற்றதால் காயம் ஏற்படாமல் இருக்க ஓய்வளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குரூப்1 பிரிவில் போர்ச்சுகல் 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும் குரோசியா 8 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இருக்கின்றன.

பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், குரோசியா, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய அணிகள் காலிறுதுக்கு தகுதி பெற்றுள்ளன. மார்ச் 20-23ஆம் தேதிகளில் இது நடைபெறும்.

2026ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பைக்கும் இதில் வரும் 8 அணிகள் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

நொய்டாவில் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு தீ வைப்பு: மைத்துனா் உள்பட 3 போ் கைது

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

நாளை முதல் மந்தைவெளி பேருந்துகள் தற்காலிக இடத்துக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சியில் நிறைவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT