போட்டிக்குப் பிறகு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பார்சினோலா வீரர்கள்.  படம்: ஏபி
செய்திகள்

சாம்பியன்ஸ் லீக்: பெட்ரிக்கு காயம், பார்சிலோனாவுக்கு முக்கியமான வெற்றி!

சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவின் வெற்றி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனா அணி முக்கியமான வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக, பார்சிலோனா அணி சாம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியலில் 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

செக் குடியரசில் ஸ்லாவியா பிராகா அணி தனது சொந்த மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனாவை எதிர்த்து விளையாடியது.

இந்தப் போட்டியில் பார்சிலோனா 4-2 என்ற கோல்கள் அடிப்படையில் அசத்தலாக வென்றது.

இந்தப் போட்டியில் ஃபெர்மின் லோபஸ் 2 கோல்களும் (34’, 42’), டேனி ஓல்மா (63’), லெவண்டாவ்ஸ்கி (70’) தலா 1 கோல் அடித்தார்கள்.

இந்தப் போட்டியில் பார்சிலோனாவின் மிட்ஃபீல்டர் பெட்ரி தசைப் பிடிப்பினால் ஏற்பட்ட அவதியினால் 61-ஆவது நிமிஷத்தில் வெளியேறினார்.

அடுத்த போட்டியில் பார்சிலோனா லாலிகா தொடரில் ஓவியோ அணியுடன் மோதுகிறது. அதில் பெட்ரி பங்கேற்பாரா என்பது சந்தேகமாக இருக்கிறது.

லாலிகா தொடரில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனா சாம்பியன்ஸ் லீக்கில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

கடந்தமுறை அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி வெளியேறியது.

கடைசியாக பார்சிலோனா அணி மெஸ்ஸி தலைமையில் 2015ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்காக பார்சிலோனா அணி காத்திருகிறது.

Pedri sustains hamstring injury in Barcelona's win in Champions League.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோஃபி டிவைன் அரைசதம்; யுபி வாரியர்ஸுக்கு 154 ரன்கள் இலக்கு!

போர் முடிவுக்கு புதினுடன் சந்திப்பு: டிரம்ப் அறிவிப்பு

மூடப்படாத ரயில்வே கேட்! லாரி மீது ரயில் மோதி விபத்து! நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் தவிர்ப்பு!

சிறை முதல் ரெட்ட தலை வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

"உதயநிதி மீது FIR போடணும்! திமுக ஆளும் கட்சியா? எதிர்க்கட்சியா?": அண்ணாமலை பேட்டி | BJP | DMK

SCROLL FOR NEXT