அர்ஜுன் எரிகைசி படம் எக்ஸ் / டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ்
செய்திகள்

கோப்பையை வென்றார் அர்ஜுன் எரிகைசி..! தவறவிட்ட உலக சாதனை!

லண்டனில் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.

DIN

லண்டனில் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.

அரையிறுதியில் பிரக்ஞானந்தாவை அர்ஜுன் எரிகைசி வென்றார். மற்றுமொரு அரையிறுதியில் எம்விஎல் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை ஆர்மகெடானில் வீழ்த்தினார்.

இறுதிப் போட்டியில் பிரென்சு வீரர் எம்விஎல் உடன் நேற்று மோதினார்.

இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்களிலும் டிரா ஆனதால் ஆட்டம் ஆர்மகெடானை நோக்கி சென்றது. அதில் மூன்றிலும் வென்று அர்ஜுன் எரிகைசி கோப்பையை வென்றார்.

தவறவிட்ட உலக சாதனை

கிளாசிக்கல் ஆட்டங்களில் வென்றிருந்தால் 2,800 என்ற புள்ளிகளை கடந்திருப்பார். ஆனால், டிரா ஆனதால் இந்த சாதனையை அர்ஜுன் எரிகைசியினால் நிகழ்த்தமுடியாமல் போனது.

இதுவரை 14 பேர் மட்டுமே 2,800 புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அர்ஜுன் எரிகைசி 2796.1 என்ற புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் நீடிக்கிறார்.

பரிசுத் தொகை எவ்வளவு?

 20,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம் 23 ஆயிரம்) பரிசுத் தொகையாகக் கிடைத்தது. மேலும், 27.84 ஃபிடே சர்கியூட் பாயிண்டுகள் கிடைத்தன.

இது குறித்து அர்ஜுன் எரிகைசி, “நான் கிளாசிக்கல் ஆட்டதிலேயே வென்றிருக்க வேண்டும்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT