ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் அண்தில் படம் | பிடிஐ
செய்திகள்

பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்று இந்தியா சாதனை! பிரதமர் பாராட்டு

பாராலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா! இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று இந்தியா சாதனை!

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

குண்டு எறிதலில் வெள்ளி வென்ற சச்சின் கிலாரி

பாரலிம்பிக்கில் இந்தியா இதுவரை மொத்தம் 21 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 19-ஆவது இடத்தில் உள்ளது.

தொலைபேசி வழியாக வீரர்களை வாழ்த்தும் பிரதமர் மோடி

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இந்திய வீரர், வீராங்கனைகள் ஒவ்வொருவரையும் தனித்தனியே பாராட்டி வாழ்த்தியுள்ளார்.

மேலும், ஒட்டுமொத்தமாக பாரீஸ் பாராலிம்பிக்கில் கலந்துகொண்டுள்ள இந்திய விளையாட்டுக் குழுவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, “இந்தியா பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் கொள்கிறது.

இதுவரை நிகழ்ந்துள்ள பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இல்லாத அளவுக்கு இந்தியா அதிக எண்ணிக்கையில் பதக்கங்களை வென்றிருப்பதன் மூலம் நமது திறன்மிக்க பாராலிம்பிக் குழு சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், நமது வீரர்களின் அர்ப்பணிப்பும், ஆர்வமும், உறுதியும் வெளிப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீரர்களுக்கும் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டு பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

ரூ.19,000 கோடி நிதியை நிறுத்திய டிரம்ப் உத்தரவு ரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆஹா... கலக்கலா இருக்கே சாய்! கேட்க கேட்க பிடிக்கும் ஊறும் பிளட்!

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!

SCROLL FOR NEXT