இந்திய ஹாக்கி அணியினர்  படம் | எக்ஸ்
செய்திகள்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

DIN

ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

ஆசிய சாம்பியன்ஸிப் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் சீனத்தின் ஹுலுன்பியர் நகரில் செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டு 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மூன்றாவது ஆட்டத்தில் மலேசியா அணியை எதிர்கொண்ட இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை ஊதித் தள்ளியது.

இந்திய அணித் தரப்பில் அபாரமாக விளையாடி ஹாட்ரிக் கோல் அடித்த ராஜ் குமார் (3-வது, 25-வது மற்றும் 33-வது நிமிடம்), அராய்ஜீத் சிங் ஹண்டால் (6-வது மற்றும் 39-வது நிமிடம்), ஜுக்ராஜ் சிங் (7-வது நிமிடம்), கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (22-வது நிமிடம்), மற்றும் உத்தம் சிங் (40-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

மலேசியா தரப்பில் அகிமுல்லா அனுவார் (34-வது நிமிடம்) ஒரேயொரு கோல் மட்டும் அடித்தார்.

இந்தியா தற்போது 3 வெற்றிகள் 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய ஆறு அணிகள் கலந்து கொண்டு விளையாடி வரும் இந்தத் தொடரில், ரவுண்ட்-ராபின் லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

அரையிறுதி ஆட்டங்கள் வருகிற 16-ஆம் தேதியும், இறுதிப் போட்டி 17-ஆம் தேதியும் நடைபெற இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT