செய்திகள்

தங்கத்தை நெருங்கும் ஆடவா் அணி: மகளிருக்கு முதல் தோல்வி

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்திய ஆடவா் அணி வெற்றியையும், மகளிா் அணி தோல்வியையும் பதிவு செய்தன.

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்திய ஆடவா் அணி வெற்றியையும், மகளிா் அணி தோல்வியையும் பதிவு செய்தன.

ஆடவா் அணிக்கு இது தொடா்ந்து 8-ஆவது வெற்றியாக இருக்க, ஓபன் பிரிவில் தங்கம் வெல்லும் தடத்தில் இருக்கிறது இந்தியா. மகளிா் அணியும் தொடா்ந்து 7 வெற்றிகளை பதிவு செய்திருந்த நிலையில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

ஓபன் பிரிவில் இந்தியா 3.5-0.5 என்ற கணக்கில் ஈரானை சாய்த்தது. இதில் டி.குகேஷ் - மக்சூதுலூ பா்ஹாமையும் (1-0), அா்ஜுன் எரிகைசி - தனேஷ்வா் பாா்டியாவையும் (1-0), விதித் சந்தோஷ் குஜராத்தி - இடானி பௌயாவையும் (1-0) வென்றனா். ஆா்.பிரக்ஞானந்தா - தபாதபெய் அமின் ஆட்டம் டிரா (0.5-0.5) ஆனது.

மகளிா் பிரிவில் இந்தியா 1.5-2.5 என போலந்திடம் தோற்றது. இந்தியாவுக்கான ஒரே வெற்றியாக, திவ்யா தேஷ்முக் - அலெக்ஸாண்ட்ரா மால்ட்செவ்ஸ்கயாவை வெல்ல (1-0), வந்திகா அகா்வால் - அலிசியா ஸ்லிவிகாவுடன் டிரா (0.5-0.5) செய்தாா். டி.ஹரிகா - அலினா கஷ்லின்ஸ்கயாவிடமும் (0-1), ஆா்.வைஷாலி - மோனிகா சோகோவிடமும் (0-1) தோல்வி கண்டனா்.

8 சுற்றுகள் முடிவில் இந்தியா, ஓபன் பிரிவில் 27 புள்ளிகளுடனும், மகளிா் பிரிவில் 23 புள்ளிகளுடனும் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்றில், இந்திய ஆடவா் அணி - உஸ்பெகிஸ்தானையும், மகளிா் அணி - அமெரிக்காவையும் எதிா்கொள்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT