அர்ஜுன் எரிகாஸி | குகேஷ் 
செய்திகள்

உலகின் ‘நம்பர் 3’ செஸ் வீரரானார் அர்ஜுன் எரிகாஸி..! 5-வது இடத்தில் குகேஷ்!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய வீரர் அர்ஜுன் எரிகாஸி உலகின் நம்பர் 3 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய வீரர் அர்ஜுன் எரிகாஸி உலகின் நம்பர் 3 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய கிராண்ட்மாஸ்டரான அர்ஜுன் எரிகைஸி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைத்து சுற்றுக்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் உலகின் சிறந்த செஸ் வீரர்கள் தரவரிசையில் நம்பர் 3 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்று இந்தியா வரலாற்று சாதனை!

உலக செஸ் தரவரிசைப் பட்டியல்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜுன், தரவரிசைப் பட்டியலில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை முந்தி 3-வது இடத்தை தனதாக்கினார்.

ஸ்லோவேனியாவின் ஜான் சுபெல்ஜுக்கு எதிராக வெற்றிபெற்றதன் மூலம் அவர் தனிப்பட்ட சிறந்த நிலையில் 2797.2 புள்ளிகளை எட்டியுள்ளார். இதன்மூலம் உலகத் தரவரிசைப் பட்டியலில் அதிகப் புள்ளிகள் பெற்ற இந்திய செஸ் வீரர் என்ற சாதனைக்கும் அர்ஜுன் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

20 வயதான அர்ஜுனைவிட ஹிகாரு நகமுரா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

அர்ஜுனைத் தொடர்ந்து மற்றொரு இந்தியரான குகேஷும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவர் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

உலக செஸ் தரவரிசைப் பட்டியல் (முதல் 5 இடங்கள்)

1. மாக்னஸ் கார்ல்சன் - 2830.82

2. ஹிகாரு நகமுரா - 2802.03

3. அர்ஜுன் எரிகைஸி - 2797.24

4. ஃபேபியானோ கருவானா - 2795.85

5. குகேஷ் - 2794.1

நியூசி.க்கு 68 ரன்கள் தேவை, இலங்கைக்கு 2 விக்கெட்டுகள் தேவை; வெற்றி பெறப்போவது யார்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

SCROLL FOR NEXT