பார்சிலோனா அணி வீரர்கள்.  படம்: ஏபி
செய்திகள்

2025-இல் தோல்வியே சந்திக்காத பார்சிலோனா: காலிறுதியில் (4-0) அபார வெற்றி!

சாம்பியன்ஸ் லீக் முதல்கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என அசத்தல் வெற்றி.

DIN

சாம்பியன்ஸ் லீக்கில் டார்ட்மண்ட் உடனான முதல்கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என அசத்தலாக வென்றது.

இந்தப் போட்டியில் ரபீனியா 5ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

அடுத்ததாக 48, 66ஆவது நிமிஷங்களில் ராபர்ட் லெவண்டாவ்ஸ்கி இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.

கடைசியில் 77அவது நிமிஷத்தில் லாமின் யமால் கோல் அடிக்க 4-0 என அசத்தல் வெற்றி பெற்றது.

டார்மண்ட் அணி அடித்த ஒரு கோலும் ஆஃப் சைடினால் மறுக்கப்பட்டது.

கடைசி கட்ட நேரத்தில் இலக்கை நோக்கி அடித்த பந்தும் பார்சிலோனா கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது அந்த அணிக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

61 சதவிகித பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்த பார்சிலோனா அணி 88 சதவிகித துல்லியத்துடன் பந்தினை பாஸ் செய்து அசத்தினார்கள்.

இந்தப் போட்டியில் ராபர்ட் லெவண்டாவ்ஸ்கி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

2-ஆம் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா - டார்மண்ட் ஏப்.16ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

2025இல் 23 போட்டிகளிலும் தோல்வியே சந்திக்காத அணியாக பார்சிலோனா அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக ரத்ததான முகாம்

ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை திறக்கக் கோரிக்கை

சுவா் இடிந்து விழுந்து வடமாநில இளைஞா் உயிரிழப்பு

மிதுன ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT