சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இன்று தொடங்கவிருந்த குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் 2025 போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுதியில் இருந்த வீரர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, வேறு விடுதியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் 2025 போட்டி இன்று (ஆக. 6) முதல் ஆக. 15 வரை நடைபெறவிருந்தது.
இந்த நிலையில், அந்த விடுதியின் 9 -வது மாடியில் நேற்று நள்ளிரவு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விடுதியில் இருந்த அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அதே பகுதியில் உள்ள மற்றொரு நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இன்று நடைபெறவிருந்த அனைத்துப் போட்டிகளும் நாளை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி போட்டியின் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நாளும் போட்டி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.