இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடைவிதிக்கப்படும் என ஃபிஃபா எச்சரித்துள்ளது.
இத்துடன் ஆசிய கால்பந்து கூட்டமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
என்ன பிரச்னை?
இந்திய கால்பந்து கூட்டமைப்பு புதிய விதிகளை அமல்படுத்த முடியாமல் இருப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தேசிய - சர்வதேச சட்ட முரண்பாடுகள், உள் பிரிவினை மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.
இது குறித்து ஆசிய கால்பந்து கூட்டமைப்பு, ஃபிஃபா கடிதத்தை வெளியிட்டுள்ளது. அதில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் இந்த பிரச்னைகளை தீர்க்காவிட்டால், இந்திய கால்பந்து உலகளாவிய தடையை எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீரர்கள், கிளப் மற்றும் லீக் நிதி நிலைமை பாதிக்கப்படும். இது குறித்து உச்ச நீதிமன்றம் நாளை (ஆக.28) விசாரிக்கிறது.
கடந்த 2017 முதல் இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சோகத்தில் இந்திய கால்பந்து ரசிகர்கள்
கால்பந்து அமைப்புகள் தன்னிச்சையாக இயங்க வேண்டுமென ஃபிஃபா நினைக்க, இந்திய அரசாங்கம் அதில் தலையிட நினைக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2036-இல் அகமதாபாதில் நடைபெற இருக்கும் நிலையில், ஃபிஃபாவினால் தடைசெய்யப்பட்டால் மோசமான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஏற்கெனவே, ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளின் ஒப்பந்தம் தொடர்பான பிரச்னைகளால் எஃப்எஸ்டிஎல் உடன் முரண்பட்டதால் அதன் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியாவின் கிளப், தேசிய கால்பந்தின் வருங்காலம் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதால், இந்திய கால்பந்து ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.