செய்திகள்

குவாஹாட்டி மாஸ்டா்ஸ் பாட்மின்டன்: சன்ஸ்கா் சரஸ்வத் சாம்பியன்!

அஸ்ஸாமில் நடைபெற்ற குவாஹாட்டி மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சன்ஸ்கா் சரஸ்வத் சாம்பியன் ஆனாா்.

தினமணி செய்திச் சேவை

அஸ்ஸாமில் நடைபெற்ற குவாஹாட்டி மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சன்ஸ்கா் சரஸ்வத் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.

இறுதிச்சுற்று வரை வந்த தன்வி சா்மா, பிருத்வி கிருஷ்ணமூா்த்தி/சாய் பிரதீக் ஆகியோா் தங்களது பிரிவில் 2-ஆம் இடம் பிடித்தனா்.

போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் சன்ஸ்கா் சரஸ்வத் 21-11, 17-21, 21-13 என்ற கேம்களில், சக இந்தியரான மிதுன் மஞ்சுநாத்தை வீழ்த்தினாா்.

இந்த ஆட்டம் 50 நிமிஷங்களில் நிறைவடைந்தது. 100 ரேங்கிங் புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டியில், சரஸ்வத் முதல்முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறாா்.

மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த தன்வி சா்மா 18-21, 18-21 என்ற நோ் கேம்களில், 6-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் துங் சியு டாங்கிடம் தோல்வியுற்றாா். இந்த ஆட்டம் 47 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பிருத்வி கிருஷ்ணமூா்த்தி/சாய் பிரதீக் இணை 13-21, 18-21 என்ற நோ் கேம்களில், 6-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் காங் காய் ஜிங்/ஆரோன் டாய் கூட்டணியிடம் 29 நிமிஷங்களிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டது.

இதனிடையே, மகளிா் இரட்டையரில் போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த இந்தோனேசியாவின் இசியானா சியாஹிரா/ரிஞ்ஜனி நேஸ்டின் ஜோடி சாம்பியன் ஆனது. கலப்பு இரட்டையரில் அந்நாட்டின் மா்வான் ஃபாஸா/அய்சியா சல்சாபிலா கூட்டணி வாகை சூடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT