கோல் அடித்த மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.  படம்: எக்ஸ் / ஹாக்கி இந்தியா.
செய்திகள்

ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்தியா..! ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் 4-ஆவது பதக்கம்!

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் வெண்கலம் வென்ற இந்தியா குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜூனியர் உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி இந்திய அணி வெண்கலம் வென்றது.

முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டீனாவை இந்திய அணி 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது.

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியின் வெண்கலப் பதக்கத்தை வெல்லும் போட்டியில் இந்தியாவும் ஆா்ஜென்டீனாவும் சென்னையில் மோதின.

இந்தப் போட்டியில் 3, 44-ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீனா 2-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த இந்திய அணி 49, 52, 57, 58-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தல் வெற்றி பெற்றது.

தொடக்க சுற்றில் ஒரு தோல்வி கூட பெறாமல் இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

சென்னையில் நடைபெற்ற காலிறுதியில் இந்தியா-பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜொ்மனியிடம் 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியதும் குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் இந்தியாவின் பதக்கங்கள்

1997 – வெள்ளி

2001 - தங்கம்

2016 - தங்கம்

2025 - வெண்கலம்

India produced a brave-heart performance, nullifying a two-goal deficit to beat Argentina 4-2 and clinch the bronze medal in the FIH Men's Junior World Cup here on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனில் அம்பானி நிறுவன மோசடி: ரூ.55 கோடியுடன் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு: மைக்ரோசாஃப்ட் - தொழிலாளா் அமைச்சகம் ஒப்பந்தம்!

எஸ்ஐஆர்: படிவம் சமா்ப்பிக்க இன்று கடைசி நாள்!

தாம்பரம் மெப்ஸ் அலுவலகத்தில் ஐந்து திருநங்கைகளுக்கு பணி

திருத்தணி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

SCROLL FOR NEXT