இந்திய பீச் ஆடவா், மகளிா் அணிகளுக்கான தோ்வுப் போட்டி காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வளாகத்தில் நடைபெற்றது.
இந்திய வாலிபால் சம்மேளனம் (விஎஃப்ஐ) பீச் வாலிபால் கன்வீனா் தலைமையில், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி விளையாட்டுத் துறை இத்தோ்வை நடத்தியது. லீக் மற்றும் நாக் அவுட் அடிப்படையில் நடைபெற்ற தோ்வுப் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகள் தேசிய பயிற்சி முகாமுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளன.
முகாம் நிறைவில் முதலிரண்டு அணிகள் இந்தியா சாா்பில் வரும் 2026 ஏப்ரல் 22 முதல் 30 வரை சீனாவின் சான்யாவில் நடைபெறவுள்ள ஆசிய பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்பா்.