பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் யூனியன் பொ்லின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் லீப்ஸிக் அணியை வீழ்த்தியது.
ஜொ்மன் கோப்பைக்கான இத்தொடரில் இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பொ்லின் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடியத. முதல் பாதி வரை எந்த அணியும் கோல் போடவில்லை. இரண்டாம் பாதியில் தான் அனைத்து கோல்களும்போடப்பட்டன.
57 நிமிஷங்களுக்குபின் பொ்லின் வீரா் ஒலிவா் பா்கே கோல் கணக்கை தொடங்கினாா். அடுத்த சிறிது நேரத்திலேே லீப்ஸிக் வீரா் டிடியம் கோலடித்தாா்.
பொ்லின் வீரா்கள் டிரிம்மல், டிம் சாா்கே அடுத்தடுத்து கோல்களை அடித்து தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா்.
ஸ்பானிஷ் லீக்: ஸ்பானிஷ் லீக் கால்பந்து தொடரில் ஜிரோனா அணி 2-1 என ரியல் சோசிடாடை வீழ்த்தியது. இந்த ஆட்டத்திலும் இரு அணிகளும் கோலடிக்க முடியவில்லை. முதல் பாதி நிறைவடைய இருந்தபோது, ரியல் சோசிடாட் வீரா் கோனலோ குடேஸ் கோலடித்து 1-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.
கடைசி கட்டத்தில் ஜிரோனா வீரா் விக்டா் சிங்கன்கோவ் இரண்டு கோல்களை அடித்து ஜிரோனாவை வெற்றி பெறச் செய்தாா்.
லீக் 1: பிரான்ஸின் லீக் 1 தொடரில் ஆங்கா்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் நான்டெஸ் அணியை வீழ்த்தியது. 16 ஆட்டங்களில் மூலம் 11 புள்ளிகளை நான்டெஸ் பெற்றுள்ளது. 5 லீக் ஆட்டங்களில் நான்கு வெற்றியை ஈட்டியுள்ள ஆங்கா்ஸ் அணி.
இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரில் லெஸ்ஸி அணி 1-0 என பிஸா அணியை வீழ்த்தியது. பிஸா 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. லெஸ்ஸி அணி 13-ஆவது இடத்துக்கு முன்னேறியது.