உலக மல்யுத்த பொழுதுபோக்கு (டபிள்யூடபிள்யூஇ) வீரர் ஜான் சீனா (48 வயது) ஓய்வு பெற்றார்.
தனது கடைசி போட்டியில் அவர் குண்டூர் உடன் டேப் அவுட் முறையில் தோல்வியுடன் வெளியேறியதால் ரசிகர்கள் மிகுந்த சோகத்துடன் இருக்கிறார்கள்.
அமெரிகாவைச் சேர்ந்த நடிகரும் மல்யுத்த வீரருமான ஜான் சீனா ஜூன் 27, 2002-இல் டபிள்யூடபிள்யூஇ-வில் அறிமுகமானார்.
90ஸ் கிட்ஸ்களின் மனம்கவர்ந்த டபிள்யூடபிள்யூஇ வீரராக ஜான் சீனா இருக்கிறார்.
எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் கடைசிவரை போராடும் அவரது விடாமுயற்சிதான் ரசிகர்களுக்கு அவரிடம் மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்திருக்கிறது.
ஜான் சீனாவின் சாதனைகள்
17 முறை உலக சாம்பியன்
5 யுனைடெட் ஸ்டேட் சாம்பியன்
1 இன்டர்கான்டினென்டல் சாம்பியன்
4 டேக் டீம் சாம்பியன்
2 ராயல் ரம்பர் வெற்றியாளர் என பல சாதனைகளை படைத்துள்ளார்.
மல்யுத்த வீரருமான ஜான் சீனா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
முதன்முதலாக நாயகனாக 2006-இல் தி மெரைன் என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இந்தாண்டு ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் படத்திலும் சூப்பர்மேன் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார்.
அடுத்தாண்டு வெளியாக மூன்று படங்கள் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மல்யுத்தத்தில் இனி அவரைப் பார்க்க முடியாவிட்டாலும் திரைப்படங்களில் பார்க்கலாம் என்பது அவரது ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயமாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.