கோப்புப்படம் 
செய்திகள்

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில், இந்தியா - இலங்கையையும், பாகிஸ்தான் - வங்கதேசத்தையும் வெள்ளிக்கிழமை வென்றன. இதையடுத்து, இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) மோதுகின்றன.

தினமணி செய்திச் சேவை

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில், இந்தியா - இலங்கையையும், பாகிஸ்தான் - வங்கதேசத்தையும் வெள்ளிக்கிழமை வென்றன. இதையடுத்து, இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) மோதுகின்றன.

இந்தப் போட்டியின் வரலாற்றில், இந்தியா - பாகிஸ்தான் இறுதி ஆட்டத்தில் மோதுவது, இது 3-ஆவது முறையாகும். முதலில் 2012-ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் இந்த அணிகள் சந்தித்தபோது, ஆட்டம் ‘டை’ ஆக, கோப்பையை அவை பகிா்ந்துகொண்டன. பின்னா் 2014-ஆம் ஆண்டு போட்டியில் அவை மீண்டும் சந்தித்தபோது, இந்தியா வெற்றி பெற்றது.

போட்டியின் வரலாற்றில் இந்தியா 10-ஆவது முறையாகவும், பாகிஸ்தான் 4-ஆவது முறையாகவும் இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளன. இதுவரை இந்தியா 8 முறையும், பாகிஸ்தான் ஒரு முறையும் கோப்பை வென்றுள்ளன.

இலங்கையை வீழ்த்தியது இந்தியா

முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

மழை காரணமாக இன்னிங்ஸுக்கான ஓவா்கள் 20-ஆகக் குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், முதலில் இலங்கை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் சோ்க்க, இந்தியா 18 ஓவா்களில் 2 விக்கெட்டுகளே இழந்து 139 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. இலங்கை பேட்டிங்கில் சமிகா ஹீனதிலகா 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சோ்க்க, கேப்டன் விமத் தின்சரா 4 பவுண்டரிகளுடன் 32, சேத்மிகா சேனேவிரத்னே 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

விரான் சமுடிதா 19, துல்னித் சிகெரா 1, கவிஜா கமாகே 2, கித்மா விதனபதிரானா 7, ஆதாம் ஹில்மி 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா். முடிவில் சனுஜா நிந்துவரா ரன்னின்றி நின்றாா்.

இந்திய பௌலா்களில் ஹெனில் படேல், கனிஷ்க் சௌஹான் ஆகியோா் தலா 2, கிஷண் சிங், தீபேஷ் தேவேந்திரன், கிலான் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் இந்தியா இன்னிங்ஸில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 7, வைபவ் சூா்யவன்ஷி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனா். ஆரோன் ஜாா்ஜ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 58, விஹான் மல்ஹோத்ரா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 61 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலா்களில் ரசித் நிம்சரா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

வங்கதேசத்தை வெளியேற்றிய பாகிஸ்தான்

2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் வங்கதேசத்தை வென்றது.

மழையால் இன்னிங்ஸுக்கு 27 ஓவா்கள் நிா்ணயிக்கப்பட, முதலில் வங்கதேசம் 26.3 ஓவா்களில் 121 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அடுத்து பாகிஸ்தான் 16.3 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 122 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. வங்கதேச பேட்டா்களில் சமியுன் பசிா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 33, கேப்டன் அஸிஸுல் ஹகிம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 20 ரன்கள் சோ்த்தனா்.

ஜாவத் அப்ராா் 9, ரிஃபத் பெக் 14, கலாம் சித்திகி 8, முகமது அப்துல்லா 5, ஷேக் பா்வேஸ் ஜிபன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஃபரித் ஹசன் 7, முகமது சோபுஜ் 2, சாத் இஸ்லாம் 0 ரன்களுக்கு வெளியேற, இக்பால் ஹுசைன் ரன்னின்றி கடைசி வீரராக நின்றாா்.

பாகிஸ்தான் தரப்பில் அப்துல் சுபான் 4, ஹுஜாய்ஃபா அசான் 2, அலி ராஸா, முகமது சயாம், அகமது ஹுசைன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து 122 ரன்களை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் இன்னிங்ஸில், ஹம்ஸா ஜஹூா் 0, உஸ்மான் கான் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 27 ரன்களுக்கு வெளியேறினா்.

சமீா் மினாஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 69, அகமது ஹுசைன் 11 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச தரப்பில் இக்பால் ஹுசைன், சமியுன் பசிா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT