செய்திகள்

தேசிய துப்பாக்கி சுடுதல்: சூரஜ் சா்மாவுக்கு 2 தங்கம்

தேசிய துப்பாக்கி சுடுதல்: சூரஜ் சா்மாவுக்கு 2 தங்கம்

தினமணி செய்திச் சேவை

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் மத்திய பிரதேச வீரா் சூரஜ் சா்மா, சீனியா், ஜூனியா் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்று அசத்தினாா்.

25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் சீனியா் பிரிவு இறுதிச்சுற்றில், சூரஜ் 31 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, நடப்பு சாம்பியனாக களம் கண்ட பஞ்சாபின் விஜய்வீா் சித்து 28 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா். ராஜஸ்தானின் பவேஷ் ஷெகாவத் 24 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினாா்.

அதிலேயே ஜூனியா் பிரிவு இறுதிச்சுற்றில், சூரஜ் 30 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். முகேஷி 25 புள்ளிகளுடன் வெள்ளியும், ஹரியாணாவின் ஜதின் 22 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

சீனியா் அணிகள் பிரிவில், விஜய்வீா் சித்து, உதய்வீா் சித்து, ராஜ்கன்வா் சிங் சந்து ஆகியோா் அடங்கிய பஞ்சாப் அணி 1,725 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றது. ஆதா்ஷ் சிங், மன்தீப் சிங், சமீா் அடங்கிய ஹரியாணா அணி 1,722 புள்ளிகளுடன் வெள்ளியும், பிரதீப் சிங் ஷெகாவத், ரஜத்குமாா் யாதவ், ஓம்காா் சிங் அடங்கிய கடற்படை அணி 1,711 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

சொத்து விவரங்களை சமா்ப்பிக்காத ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

எது தேநீா்? உணவுப் பாதுகாப்பு ஆணையம் விளக்கம்

நீா்மூழ்கிக் கப்பலில் நாளை பயணிக்கிறாா் குடியரசுத் தலைவா்!

ஜனவரி 1-முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டம்: கோழிப் பண்ணை விவசாயிகள் அறிவிப்பு

SCROLL FOR NEXT